குலதெய்வம் மற்றும் கும்பாபிஷேக வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லையா? அப்போ இதை செய்யுங்கள்
சில கோவில்களில் வருடத்திற்கு ஒரு முறை வெகு விமர்சையாக திருவிழாக்களை கொண்டாடும் வழக்கம் உண்டு .
சில நேரங்களில் அத் திருவிழாக்களில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். அது போன்ற சமயங்களில் ஒரு சிறிய வழிபாட்டை நம் வீட்டில் செய்தால் கும்பாபிஷேகம், குலதெய்வ திருவிழா இவற்றில் கலந்து கொண்டதற்கான முழு பலனும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
குலதெய்வ வழிபாடு
குலதெய்வ கோவில் வழிபாடு கும்பாபிஷேகம் நாளை நடக்கப் போகிறது என்றால் இன்று வீட்டை சுத்தம் செய்து பூஜை அறைகளை சுத்தம் செய்து படங்களுக்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து அனைத்து பூஜை வேலைகளும் முடித்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
அத்தோடு அந்த நாட்களில் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் நல்லது.
வழிபடும் முறை
திருவிழா, கும்பாபிஷேகம் நடக்கும் இந்த நாட்களில் விடியற்காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வீட்டில் விளக்கு ஏற்றி ஒரு வழிபாடு செய்து விடுங்கள்.
அதன் பிறகு குலதெய்வ கோவில் திருவிழாவாக இருந்தால் அந்த தெய்வத்திற்கு என்ன செய்து படைப்பீர்களோ அதை செய்து கொள்ளுங்கள்.
வேறு கோவில் விசேஷங்கள், கும்பாபிஷேகம் ஆக இருந்தால் ஏதாவது ஒரு நெய்வேத்தியம் செய்து கொள்ளுங்கள்.
வெற்றிலை, பாக்கு, பூ, பழம் போன்றவற்றையெல்லாம் வைத்து அங்கு பூஜை நடக்கும் வேளை அல்லது கும்பாபிஷேகம் நடக்கும் வேளையில் எந்த தெய்வத்திற்கு நடக்கிறதோ அந்த தெய்வத்தின் திருவுருவ படத்திற்கு மாலை போட்டு இந்த நெய்வேத்தியங்களை படைத்து வழிபாடு செய்யுங்கள்.
திருவுருவப்படம்
இதில் முக்கியமான ஒன்று எந்த தெய்வத்திற்கான வழிபாடு செய்கிறோமோ அந்த தெய்வத்திற்கான திருவுருவப்படம் நிச்சயமாக இருக்க வேண்டும்.
பூஜை நடக்கும் வேளையில் வீட்டு பூஜை அறையில் திருவுருவப்படத்திற்கு முன் அமர்ந்து மனதார அந்த தெய்வத்தின் உருவத்தை மனதில் கொண்டு வந்து வேண்டுதல்கள் குறைகளை அவர்களிடம் சொல்லுங்கள்.
கண்டிப்பாக வேண்டுதலுக்கு அவர்கள் செவி சாய்த்து உங்களுக்கு அருள் புரிவார்கள் என்று சொல்லப்படுகிறது.
அன்னதானம்
இதை செய்த பிறகு நிச்சயமாக அந்த நாளில் யாரேனும் ஒருவருக்கு நாம் அன்னதானம் செய்ய வேண்டும். இது தெய்வத்திற்கு நேரடியாக நாம் செய்யும் பலனை கொடுக்கும்.
அதை செய்த பிறகு நீங்கள் வந்து வீட்டில் இருக்கும் நெய்வேத்திய உணவை சாப்பிடலாம்.
இது மிக எளிய வழிபாடு தான் தவிர்க்க முடியாத காரணத்தினால் அங்கு செல்ல முடியாதவர்கள் மட்டும் இந்த வழிபாட்டை அன்றைய தினம் செய்து கொள்ளுங்கள்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.