O/Lவிடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் இடைநிறுத்தம்!
O/L பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் இன்று (12) பிற்பகல் 01 மணிக்கு பின்னர் இடைநிறுத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிபர்-ஆசிரியர் போராட்டம்
சாதாரண தர பரீட்சை விடைத் தாள்களை திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் 101 மத்திய நிலையங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள 100 வலய கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு முன்பாக இன்று (12) பிற்பகல் 01 மணிக்கு அதிபர்-ஆசிரியர் போராட்டம் பாரியளவில் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் -ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குதல், கல்வி சுமையை பெற்றோர் மீது சுமத்துவதை உடனடியாக நிறுத்துதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.