இணையத்தை கலக்கும் கொரோனா வடை! ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒட்டுமொத்த உலகமும், கொரோனா என்னும் கொடிய வைரஸ் பிடியில் சிக்கி தவித்து வருகிறது.
என்ன தான் இந்த கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் குறிப்பிட்ட காலத்தில் பின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று உருமாற்றமடைந்து தாக்கி வருகின்றன.
இதன் காரணமாக உலக மக்கள் மனதில் மீண்டும் அச்சம் அதிகரிக்கிறஅத்கரித்துள்ளது. இந்த சூழ்நிலைகளிலிருந்து வெளிவர தங்கள் மன அழுத்தத்தை போக்க, சமூக வலைத்தளங்களில் , சில வேடிக்கையான வீடியோக்கள் அவ்வப்போது உலா வருவது வழக்கம்.
Corona vada! Bharat ki naari sab par bhaari! .@arindam75 pic.twitter.com/sf1zoLPih2
— Mimpi? (@mimpful) January 19, 2022
கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுவதால், புதிது புதிதாக சில வித்தியாசமான உணவு பொருட்களை சமைத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது, பெண் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கொரோனா வடிவில் வடையின் ரெசிபி செய்து இணையத்தில் பதிவிட்டு உள்ளார்.
தற்போது, அந்த ரெசிபி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.