10 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட கொரோனா தொற்றாளர்
இலங்கையில் 10 வயது சிறுமியிடம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தகாத முறையில் நடந்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அளுத்கம பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் தேடப்பட்டு வந்த நிலையில், சட்டத்தரணி ஊடாக அளுத்கம பொலிஸில் சரணடைந்த பின்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை கண்டறிந்து, அளுத்கம பொலிஸார் அவரை கைது செய்து பின்னர் கோவிட் மருத்துவ மையத்தில் ஒப்படைத்தனர்.
சந்தேகநபரை அழைத்து வந்த மொரகல்ல, அளுத்கம பகுதியை சேர்ந்த சட்டத்தரணி மற்றும் அவரது குடும்பத்தினரை பேருவளை சுகாதார மருத்துவ அதிகாரியால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த பரிந்துரைக்கப்பட்டனர்.
இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர் அளுத்கம, கணேகம பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஆவார். சந்தேகநபர் அளுத்கம, கணேகம பகுதியினை சேர்ந்தவர் ஆவார்.
சந்தேகநபர் தனது மகளை துஷ்பிரயோகம் செய்ததை நேரில் பார்த்ததாக சிறுமியின் தாய் அளுத்கம பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.