இலங்கையில் தொடர்ந்து உயரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
இன்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணி வரை 298 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 89 473 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 86 227 பேர் குணமடைந்துள்ளதோடு, 2564 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதே வேளை 8 இலட்சத்து 15 585 பேருக்கு நேற்று வரை கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியது. இவ்வாறு உயிரிழந்தவர் இப்பாகமுவ பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆணொருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 17 ஆம் திகதி இரத்தம் நஞ்சானமை, கொரோனா நிமோனியா என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.