சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
corona
prison
negombo
By Krishna
சிறைச்சாலைகளில் மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,125 ஆக உயர்ந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் ஆண் கைதிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி வெலிக்கடை சிறைச்சாலையில் 929 பேரும் மஹசீன் சிறையில் 881 பேரும் மஹர சிறையில் 836 பேரும் கொழும்பு ரிமாண்ட் சிறையில் 458 மற்றும் நீர்கொழும்பு சிறையில் 371 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் தொற்றில் இருந்து 4,702 கைதிகள் மற்றும் 158 சிறைச்சாலை அதிகாரிகள் குணமடைந்துள்ளதாகவும் 250 கைதிகள் மற்றும் இரண்டு அதிகாரிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US