முதியோர் இல்லமொன்றில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று
பிலியந்தலை முதியோர் இல்லத்தில் உள்ள அலுவலக ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக பிலியந்தல சுகாதார மருத்துவ அதிகாரி இந்திக எல்லாவல தெரிவித்தார்.
அதன்படி அங்குள்ள 20 முதியோர்கள் மற்றும் 6 அலுவலக ஊழியர்கள் குறித்த இல்லத்தில் தொற்றுக்காளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வைத்தியசாலைகளில் நிலவும் நெரிசல் காரணமாக நோயாளர்கள் அதே முதியோர் இல்லத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கொழும்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அருண ஜெயதிலக, பிலியந்தலை சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவ இந்திகா எல்லவல, பிலியந்தலை மாவட்ட மருத்துவமனை மருத்துவ அதிகாரி மருத்துவர் நந்தனி சோமரத்ன தலைமையிலான குழுவினர் முதியோர் இல்லம் சென்று அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்கியுள்ளனர்.