கொழும்பில் வீதியில் உறவினர்களால் கைவிடப்பட்ட வயதான தம்பதியருக்கு ஏற்பட்ட பரிதாபம்!
இலங்கையில் கொரோனா தொற்றின் கொடூர நிலையில், தினமும் ஆயிரம் பேர் தொற்றுக்குள்ளாவதுடன், உயிரிழந்தும் வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, கொரோனா தொற்று பரவும் அச்சத்தில், சொந்த உறவுகளைக் கூட வெறுத்து கைவிடுகின்ற அவல நிலைக்கு இச்சமூகம் தள்ளப்பட்டுவிட்டது .
அதன்படி 3 தினங்களுக்கு முன்னர், வெல்லம்பிட்டிய சந்தியில் கைவிடப்பட்டிருந்த, வயதான தம்பதியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இங்கிரியவைச் சேர்ந்த குறித்த தம்பதிகள், அடையாளம் தெரியாதாவர்களால் வெல்லம்பிட்டிய சந்தியில் கைவிடப்பட்டிருந்தனர்.
கடையொன்றுக்கு முன்பாக தங்கியிருந்த குறித்த இருவரையும் சுகாதார பரிசோதகர்கள் பி.சி.ஆர் பரிசோதனை செய்த போது, அவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.