அன்டிஜன் பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா
மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்கள் தொடர்பில் கடந்த ஒன்பது நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கமைய 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் அன்டிஜன் பரிசோதனைகள் உரிய 11 பகுதிகளிலும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த 18 ஆம் திகதி முதல் இன்று காலை 6.00 மணிவரையில் காலப் பகுதியில் 8 ஆயிரம் பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 49 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களுடன் நெருக்கமாக பயணித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார் .