வவுனியா தமிழ் பாடசாலையொன்றில் 10 மாணவர்களிற்கு கொரோனா!
வவுனியா வடக்கு வலய பாடசாலை ஒன்றில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மறவன்குளம் பாரதி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 5 மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குறித்த மாணவனுக்கு நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மாணவனுடன் தொடர்புடைய ஏனைய மாணவர்களுக்கு இன்று (13) துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அப் பாடசாலையைச் சேர்ந்த தரம் 5 மாணவர்கள் 7 பேருக்கும், தரம் 11 மாணவர்கள் இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொற்றுக்குள்ளான மாணவர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகளையும் சுகாதாரப் பிரிவினர் எடுத்துள்ளனர்.