கொரோனா கோரத்தாண்டவம்: சுடுகாடாக மாறிய பூங்கா: வெளியான அதிர்ச்சி புகைப்படம்
கொரோனா தொற்றுநோயால் இந்திய தலைநகர் டெல்லி விழிபிதுங்கியுள்ள நிலையில் இருப்பதால் 10 ஏக்கரில் கூடுதல் தகன மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா இறப்பு அதிகரித்து வருகிறது. இதனால், இறந்தவர்களின் உடல்கள் தகன மேடைகளிலும், மற்றும் கல்லறைகளில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் கொரோனா இறப்பு அதிகரித்து வருகிறது. இதனால், இறந்தவர்களின் உடல்கள் தகன மேடைகளிலும், மற்றும் கல்லறைகளில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

பல மணிநேர தாமதத்தின் விளைவாக, மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
இதை நிவர்த்தி செய்வதற்காக, டெல்லியில் உள்ள வட கார்ப்பரேஷன் நிர்வாகம் அந்த நிர்வாகத்தின் கீழ் மங்கோல்புரியில் ஒரு புதிய ஏற்பாட்டை செய்துள்ளது.
எனவே, இப்பகுதியில் உள்ள ஐந்து ஏக்கரில் இந்துக்களுக்கு புதிய தகனம் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான கல்லறைகள் முறையே 3 மற்றும் 2 ஏக்கரில் அமைந்துள்ளன.
கொரோனா சூழல் முற்றிலுமாக மாறிவிட்டதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் வடக்கு டெல்லி மேயர் ஜெய் பிரகாஷ் தெரிவித்தார்.
மக்கள் உறவுகளை இழப்பதால் மட்டுமல்லாமல், இறுதிச் சடங்குகளுக்காகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நோக்கத்திற்காக மொத்தம் 10 ஏக்கரில் தகனம் மற்றும் கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக டெல்லி அபிவிருத்தி ஆணையம் சார்பாக மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
மேலும் தென்கிழக்கு டெல்லியில் உள்ள பூங்கா சுடுகாடாக மையமாக உள்ளது.