பாடசாலைகளில் கொரோனா கொத்தணியா? - ஹேமந்த் விளக்கம்
பாடசாலைகளில் கொரோனாக் கொத்தனார்கள் எதுவும் உருவாகவில்லை என சுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள சுமார் நான்கு மில்லியன் பாடசாலை மாணவர்களில் சுமார் 400 முதல் 500 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டுச் சூழலில் இருந்து ஏராளமான மக்கள் தொற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர்.
பாடசாலை மாணவ, மாணவியர் மத்தியில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதில்லை. பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றினால் கிளஸ்டர்கள் உருவாக வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், பாடசாலைகளில் கொரோனா சுகாதார வழிகாட்டுதல்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.