வவுனியாவில் கோர விபத்து
வவுனியா செட்டிகுளம் தட்டாங்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. செட்டிகுளம் பகுதியில் இருந்து பூவரசங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் தட்டாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்துகொண்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
சம்பவத்தில் ரங்கெத்கம பகுதியைச் சேர்ந்த 41 வயதான நந்தன கிருசாந்த என்ற நபரே உயிரிழந்தார். விபத்து தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.