மேலும் 5,00,000 சினோபோர்ம் தடுப்பூசிளை நன்கொடையாக வழங்கும் சீனா
இலங்கை நாட்டுக்கு மேலும் பல லட்ச சினோபோர்ம் தடுப்பூசிகள் வழங்க சீனா அரசு முன்வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாடு மக்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதிகளாக இந்தியா,சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை இலங்கை நாட்டுக்கு நன்கொடையாக வழங்கி வருகின்றன.
மேலும் 500,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கவுள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. இந்த மாதத்திற்குள் குறித்த பங்குகள் கிடைக்கும் என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் உறுதியளித்துள்ளது.
கொரோனா வைரஸின் தற்போதைய அலைக்கு எதிராக போராடும் இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதே சீனாவின் நோக்கம் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.