கதறி அழும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள்: என்ன காரணம் தெரியுமா?
தமிழகத்தில் மிகவும் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்பன மக்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இதில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி (CWC). இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பப்படுவதோடு இந்த சீசனுக்கும் ரசிகர்களிடையே இருந்து பெரும் அதரவு கிடைத்துள்ளது.
மேலும் வாரம் தோறும் கலகலப்பாக சென்று கொண்டு இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது ஷாக்கிங் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில் ரக்ஷன் “சாரி, சிறிய தவறு நடந்து விட்டது” என கூறியுள்ளார்.
பின் செஃப் தாமு ” I love you so much, All of you” என விடைபெறுவது போல் பேசியுள்ளார். அத்தோடு போட்டியாளர்கள் அனைவரும் கண்கலங்கியுள்ளனர்,
இதனால் ரசிகர்களும் நிகழ்ச்சியை விட்டு தாமு சொல்கிறாரா! எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். என்பதோடு என்ன நடந்ததோ எனக் குழப்பத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.