இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் விலை உயர்வு; அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!
இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2500 ரூபாவாக இருந்த லிட்ரோ எரிவாயுவின் விலை இரட்டிப்பாக அதிகரிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த தெஷார ஜயசிங்க கடந்த 15ஆம் திகதி தமது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிந்திய தகவல்
இதேவேளை லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாததால், விலை அதிகரிப்பு இடம்பெறாதெனவும் 12.5 kg சிலிண்டரின் விலை முன்னைய தொகையில் இருக்குமெனவும் அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.