முகநூலில் ஊடுருவியதால் ஏற்பட்ட சர்ச்சை: நால்வரை கைது செய்த பொலிஸார்
முகநூல் ஊடுருவலை மேற்கொண்டு தவறான செய்திகளை பதிவிட்டதாக கூறி சந்தேக நபர் மீது தாக்குதல் இடம்பெற்றதாக ஊர்வாகற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஒரு இளைஞரின் முகநூல் பக்கத்தில் ஊடுருவி அவருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சந்தேக நபர் பதிவை இட்டுள்ளார்.
இதனால் பாதிக்கபட்ட இளைஞனும், அவரது நண்பர்களும் முகநூலை ஊடுருவியவரின் வீட்டிற்கு சென்று சந்தேக நபரின் தந்தையிடம் கூறிவிட்டு நால்வரும் திரும்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் சிறிதுநேரம் கழித்து மீண்டும் சந்தேக நபரின் வீட்டுக்கு சென்ற நண்பர்கள் அவரை வெளியே வருமாறு அழைத்துள்ளனர். வெளியே வந்த சந்தேக நபரிடம் முகநூலை எதற்காக ஊடுருவினாய் என கேட்டு அவரை தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான சந்தேக நபரை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
சந்தேக நபரை தாக்கிய நால்வரையும் ஊர்காவற்துறை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.