மீண்டும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் எழுந்த சர்ச்சை!
புற்றுநோயை உண்டாக்கும் தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிறுவனம், தேங்காய் எண்ணெயை தனது வர்த்தக நாமத்தில் மீண்டும் சந்தைக்கு வெளியிட ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டினை அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் சுமத்தியுள்ளது. இது குறித்து அச்அ சங்கத்தின் தலைவர் புத்திக டி சில்வா கூறுகையில்,
குறித்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு நிறுவனத்திற்கு என்ன அங்கீகாரம் உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்தார்.
ஏப்ரலில் இது தொடர்பில் சங்கம் முறைப்பாடு செய்த போது, அஃப்லாடோக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்து வருவதாக நுகர்வோர் அதிகார சபை கண்டறிந்ததாகவும் டி சில்வா குறிப்பிட்டார்.
எனினும் அந்த்அ நிறுவனம் தனது தவறை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், நுகர்வோரின் பாதுகாப்பு குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் குறித்த விவகாரம் தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், நுகர்வோர் விவகார அதிகாரசபை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.