ட்ரம்பின் புதிய அவதாரத்தால் வெடித்துள்ள சர்ச்சை ; அன்று இலங்கை இன்று அமெரிக்கா
திருத்தந்தை 14ஆம் லியோ குறித்து அமெரிக்க ஜனாதிபதிப டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்த ஒரு படம் ஆகியவை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ட்ரம்ப் பகிர்ந்த படத்தில் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் ஒரு நபரின் மீது ட்ரம்ப் கைகளை வைத்திருப்பதும், அவரது கைகளிலிருந்து ஒளி வீசுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது அவர் தன்னை இயேசுவை போல சித்தரிப்பதாக பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன.

இது மட்டுமின்றி ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், போப் லியோ "குற்றங்களுக்கு எதிராக மென்மையானவர்" என்றும், அவர் ஒரு "தீவிர இடதுசாரி" போலச் செயல்படுவதாகவும் சாடியிருந்தார். மேலும், போப் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், போப்பாக மட்டும் இருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து அல்ஜீரியா செல்லும் விமானத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, போப் லியோ “ட்ரம்ப் நிர்வாகத்திற்கோ அல்லது சுவிசேஷத்தின் செய்தியை உரக்கச் சொல்வதற்கோ நான் பயப்படவில்லை. அதுவே எனது பணி," என்று போப் திட்டவட்டமாகக் கூறினார்.
இது போன்ற நிலை 2009ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்றபோது இலங்கையில் இருந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினுடைய மனநிலையும் டொனால்ட் ட்ரம்பினுடைய மனநிலையும் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக மகிந்த ராஜபக்சவோடு அக்காலப்பகுதியில் தமிழ் ஆயர்கள் கடுமையான கருத்துக்களை கூறினார்கள். அதில் சில ஆயர்கள் குறிவைக்கப்பட்டதுடன் மிரப்பட்டார்கள். கிட்டத்தட்ட டொனால் ட்ரம்பின் இன்றைய நிலையில் மகிந்த செயற்பட்டதாக கூறப்படுகிறது.
இவை தொடர்பான பல்வேறு விடயங்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...