தொடரும் மின்தடைகள்: எடுக்கப்படவுள்ள இறுதி தீர்மானம்
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கும் வரை மின்சாரம் தடைபடுமா அல்லது இல்லையா, என்பது குறித்து இன்று (10) முடிவு செய்யப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
விசேட கலந்துரையாடல்
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பாணந்துறை கிரீட் உப மின் நிலையத்தில் குரங்கு ஒன்று குதித்ததால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக நேற்று (09) காலை 11.15 மணியளவில் நாடளாவிய ரீதியில் திடீரென மின் தடை ஏற்பட்டது.
இந்த சம்பவத்தால் மின்சார அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையே மின் தடைக்குக் காரணம் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய கலந்துரையாடலில் மின்வெட்டு இல்லாமல் மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.