கனடாவில் தொடரும் கொலைச்சம்பவங்கள்;
கனடாவில் சில குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கூறிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் மொன்டோரியலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் 15 வயது இளைஞர் ஒருவரும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செயிண்ட்-ஆண்ட்ரே மற்றும் மென்டோனா வீதியில் சுமார் 15 பேர் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களும் மோதலில் ஈடுபட்டுள்ளதுடன் குறித்த தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததையடுத்து சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதல்ல என அந்நாட்டு பொலிஸார் உறதிபடுத்தியுள்ளனர்.
கடந்த 10 நாட்களில் மாத்திரம் மொன்டோரியலில் ஏழு கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.