நுகர்வோர் விவகார அதிகாரசபை படைத்த புதிய சாதனை
கடந்த 2025 ஆம் ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் 1,540 நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் வரலாற்றில், ஒரு வருட காலத்தில் நடத்தப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையிலான நிகழ்ச்சிகள் இதுவென அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

விழிப்புணர்வு நடவடிக்கை
இந்த நிகழ்ச்சிகள் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகாரசபையின் அதிகாரிகள் 1,20,000 க்கும் அதிகமான மக்களை நேரடியாகச் சந்தித்து விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக மின்னணு, டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த 2026 ஆம் ஆண்டிலும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தை இலக்காகக் கொண்டு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேலும் விரிவுபடுத்த அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.