சுயநினைவுடன் மூளையில் சத்திரசிகிச்சை; 3 ஆவது முறை இலங்கை மருத்துவர்கள் சாதனை!
நோயாளி சுயநினைவுடன் ஓவியம் வரைந்துகொண்டிருக்கையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டு ('awake craniotomy’) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
('awake craniotomy’)எனும் குறிப்பிட்ட சத்திரசிகிச்சையை நோயாளிகள் சுயநினைவுடன் இருக்கும்போது மேற்கொள்ளமுடியும்.
ஓவியம் வரைந்த நோயாளி
அதேவேளை இந்த மருத்துவ குழுவினர் இவ்வாறான மூன்றாவது சிகிச்சையை மேற்கொண்டுள்ள நிலையில் முதலாவது சத்திரசிகிச்சையும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலேயே இடம்பெற்றது.
நோயாளியின் மூளையின் இடது பக்கத்தில் உள்ள கட்டியை பிரிப்பதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது அவர் குறைந்தபட்ச மயக்கநிலையிலேயே காணப்பட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
36 வயது சிற்பக்கலைஞரான நோயாளி சத்திரசிகிச்சை இடம்பெற்றவேளை ஓவியம் வரைந்துள்ளார், அதேசமயம் பேச்சு மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்தும் அவரது மூளையின் ஒரு பகுதியை தவிர்ப்பதற்காக அவரை ஓவியம் வரையுமாறு வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் நொச்சியாகமவை சேர்ந்த இந்த நோயாளி சத்திரசிகிச்சையின் பின்னர், எந்த வித பாதிப்பும் இல்லாமல் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.