21வது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் பெரமுன கட்சிக்குள் முரண்பாடா?
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்சி தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டைக் குடியுரிமை மறுக்கப்பட்டமை மற்றும் ஜனாதிபதியின் அதிகாரத்தின் ஒரு பகுதியை பிரதமருடன் பகிர்ந்தமையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என்றும், பசில் ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்கள் இந்த ஏற்பாட்டை எதிர்ப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு ஆதரவான வளர்ந்து வரும் கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்ற விதியை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. வாக்கெடுப்பின் போது பிளவு தெரியும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, 21ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவு செய்வதற்கான முக்கிய கூட்டம் எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.