சர்ச்சைக்குரிய கருத்து; ஞானசாரரிடம் வாக்குமூலம் பெறப்போவதில்லை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறலாம் என தெரிவித்த பொதுபலசேனாவின் ஞானசாரதேரரிடம் வாக்குமூலம் பெறத்தேவையில்லை என பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் ஞானசார தேரருடன் புலனாய்வு பிரிவினர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் என்றும், எனினும் அவரை பொலிஸ்நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்யப்போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர்ஜெனரல் ஜகத் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
பௌத்தமதகுரு எவ்வேளையிலும் தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய தனிநபர்கள் இருக்ககூடும் என அவர் கூறினார். எனவே அறிக்கைகளை வெளியிடும் அனைவரிடமிருந்தும் பொலிஸாரினால் வாக்குமூலங்கை பெறமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பாதுகாப்பின் அமைச்சின் எதிர்கால கூட்டங்களில் பௌத்தமதகுருவிடம் வாக்குமூலம் பெறுவது குறித்து ஆராயப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.