இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு நடத்த தடை ; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இடைக்கால தடைவிதித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த நீதிமன்றத்தால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணை
இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் முன்னிலையாகியிருந்தார். அதேவேளை தேசிய மாநாட்டுக்கு தடைகோரி யாழ். நீதிமன்றத்திலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை உட்கட்சி சூழ்ச்சிகளை முறியடித்து, உடனடியாக மாநாட்டை நடாத்துமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் ஸ்ரீதரனுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.