இளங்குமரன் Mp க்கு எதிராக தனியார் நிறுவனம் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இளங்குமரன் Mp க்கு எதிராக தனியார் நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளது.
தனது தொழில் நிறுவனத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை மறித்து ஒளிப்பதிவு காட்சிகளை வழங்கியமை தொடர்பிலேயே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டற் கற்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியை வழிமறித்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தார்.
சட்டவிரோதமான முறையில் கண்டற் கற்களை அகழ்ந்து செல்லப்படுவதாக பிரதேச மக்களால் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்து அது தொடர்பில் அவர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.