வறட்சியான காலநிலை காரணமாக பயிர் சேதங்களுக்கு இழப்பீடு
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வறண்ட காலநிலை குறித்து நேற்று (31) நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வறட்சியான காலநிலை காரணமாக விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக நீர் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நீர் மின்சார உற்பத்திக்காக நீர் வழங்கப்படுவதாகவும், குடிநீர் வழங்குவதில் பிரச்சினை இல்லை எனவும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சிக்கல் நிலை காரணமாக பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கேற்ப முறை குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.