பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் குடும்பத்திற்கு கருணைக் கொடுப்பனவு!
பாகிஸ்தானில் தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு கருணைக் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Sliva) தெரிவித்துள்ளார்.
குடும்பத்தைச் சார்ந்தவர்களின் எதிர்காலத்திற்காக நலன்புரி வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்து அதிகபட்ச சலுகைகளை வழங்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றுக்கும் அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின், சியால்கோட்டில் ஒரு கும்பல் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையைச் சேர்ந்த மேற்படி நபரை சித்திரவதை செய்து அவரது உடலை எரித்து கொன்றமை குறிப்பிடத்தக்கது.