தைரியமிருந்தால் சர்வதேச விசாரணைக்கு வாருங்கள்! சவால் விடுத்த கஜேந்திரன்
தற்போதைய அரசாங்கம் போர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்றால் அதனை நிரூபிக்க சர்வதேச விசாரணைக்கு வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (Selvarajah Kajendren) தெரிவித்துள்ளார்.
மேலும், துணிவிருந்தால் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், முள்ளிவாய்க்காலில் வைத்து ஊடகவியலாளர் ஒருவரை இராணுவத்தினர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இது ஒரு மிருகத்தனமான தாக்குதல், இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். கண்துடைப்புக்காக கைது செய்யப்பட்ட 3 இராணுவ வீரர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தமிழர்கள் மீது இராணுவம் முன்னெடுத்த பாரிய யுத்தக் குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமையே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அரசாங்கம் போர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்றால் அதனை நிரூபிக்க சர்வதேச விசாரணைக்கு வரவேண்டுமெனவும், துணிவிருந்தால் வாருங்கள் எனவும் அவர் இதன்போது சவால் விடுத்துள்ளார்.