ஆட்சியை கவிழ்க்க வாருங்கள்; விமல் அறைகூவல்!
இனியும் இந்த அரசை பாதுகாக்க வேண்டாம் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, வெளியேறுங்கள் என ஆளுங்கட்சியினருக்கு நாட்டு மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார் .
அத்துடன் நாட்டின் நிலைமை தொடர்பில் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என தெரிவித்த அவர், பசில் ராஜபக்ச இருக்கும்வரை உள்ளக கலந்துரையாடல்மூலம் தீர்வை எதிர்பார்க்கமுடியாது என்றும் சாடினார்.
பசில் ராஜபக்க்ஷ அமெரிக்கா மற்றும் இந்தியாவை நோக்கியே நாட்டை அழைத்துச்செல்கின்றார் எமது நாட்டின் வான்பரப்பின் ஒரு பகுதியும் வழங்கப்பட்டுவிட்டதுடன் தீவுகள் சிலவற்றயும் விற்பனை செய்யவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக கூறினார்.
எனவே, நாடுமீது கடுகளவேனும் பற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசுக்கான சாதாரண பெரும்பான்மையை இல்லாது செய்ய முன்வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த அரசை பாதுகாக்க வேண்டாம், வெளியேறுங்கள் என ஆளுங்கட்சியினருக்கு மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு நடந்தால் அரசு பெரும்பான்மையை இழந்துவிடும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்