யாழிற்கு வாருங்கள்; தமிழக முதல்வருக்கு அழைப்பு
தமிழக முதல்வர் ஸ்டாலினை யாழிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மயிலிட்டி துறைமுகத்தில் இடம்பெற்ற சந்தின்போது டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்தார்.
மீன்பிடி துறைமுகங்கள் அமைந்துள்ள அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கே முன்னுரிமை வழங்க கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் தலைமையிலான இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இந்திய மீனவர் பிரச்சினைக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட உயர்மட்டத்தினருடன் பேசி வருவதாக தெரிவித்த அவர், இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசின் உதவியும் வடக்கு மீனவர்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
அதேவேளை தமிழக முதல்வர் ஸ்டாலினை யாழிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்த மீன்பிடி அமைச்சர், திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு கச்சதீவு திருவிழா தொடர்பில் உரையாடிய போது இக்கோரிக்கையை அவரிடம் முன்வைத்தாகவும் கூறினார்.