மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும்; சசிகலா வீட்டின் முன் ஆதரவாளர்கள் தர்ணா
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்த நிலையில் அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தி அவரது வீட்டின் முன் சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்திக்கப்போவதாக சசிகலா நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த ஆதரவாளர்கள் 6 பேர் சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலா வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் அவர்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என பொலிசார் வலியுறுத்தியும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை எனவும் தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.