முல்லைத்தீவு விபத்தில் கொழும்பு இளைஞர் பலி
வீதி ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் 24 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் .
செவ்வாய்க்கிழமை (01) இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மோட்டார் சைக்கிளில் மோதி உழவு இயந்திரம் தடம்புரழ்வு
உழவு இயந்திரத்தினை திருத்தப்பணிக்காக கொக்கிளாயிலிருந்து கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள திருத்தகத்திற்கு சென்று மீண்டும் கொக்குளாய் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இட்ம்பெற்றுள்ளது.
கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு முன்பாக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.
அத்துடன் இந்த விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து சம்பவத்தில் கொழும்பை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு மரணமானவராவார்.
42 மற்றும் 27 வயதுடைய இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மூவரும் உழவு இயந்திரத்தில் பயணித்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.