கொழும்பு வாழ் மக்களுக்கு இன்றைய தினம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
கொழும்பில் உள்ள பல பகுதிகளில் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்றைய தினம் (21) காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையான 9 மணி நேரம் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.