கொழும்பில் வாழும் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திடீரென நீர் தடை ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இந்த திடீர் நீர் விநியோகம் தடை நீர் குழாய் உடைந்தமையினால் ஏற்பட்டுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோக தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நீர் விநியோகம் தடை, தெஹிவளை மற்றும் கல்கிசை பகுதிகள், இரத்மலானை, கொழும்பு 05, கொழும்பு 06, பத்தரமுல்ல, பெலவத்த, உடுமுல்லை, ஹிம்புட்டான ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு 4இல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நீரை பெற்றுக்கொள்ள திண்டாடி வருகின்றனர்.