கொழும்பின் ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை ; பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
தெஹிவளை - கடலோர வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் 2026.01.09 அன்று சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கைதுசெய்ய கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாளர்கள் குறிப்பிட்ட அங்க அடையாளங்களை கொண்டு AI தொழினுட்பத்தின் உதவியுடன் துப்பாக்கிதாரியின் புகைப்படம் வடிவமைக்கப்பட்டு பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவின் 071 - 8596408 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.