கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற மஹா சிவராத்திரி
சிவனுக்கு உகந்த மஹா சிவராத்திரி தினம் நேற்று (08) இந்துக்களால் சிறப்பான முறையில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் நாடெங்கிலும் உள்ள சிவாலயங்களில் மிகச்சிறப்பாக மஹா சிவராத்திரி விரதம் பகிதி மயத்துடன் அனுஸ்டிக்கப்பட்டது.
300 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வந்திருக்கும் மஹா சிவராத்திரி தினம் மிகவும் சிறப்பானதென கூறப்படுகிறது. நாடளாவிய ரீதியில் பல சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விசேட பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன.
அந்தவகையில் கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திலும் நேற்று மஹா சிவராத்திரி விசேட பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றது.
லிங்கோற்பவருக்கு விஷேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று சிவராத்திரி பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.
இதில் பல பாகங்களில் பெரும் திரளான பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.