கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் குத்தகைக்கு செல்லும் அரசக் காணிகள்
கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் குத்தகைக்கு செல்லும் அரசக் காணிகள் இலங்கைக்கு வருவாயை எதிர்பார்த்தது, கொழும்பு மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட பிரதான நிலங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன.
51 சதவீத பங்குகளை அரசிடம் வைத்துக்கொள்ளும் வகையில், தனியார் பங்குதாரர்கள் அல்லது கூட்டு முயற்சிகளுக்கு இந்தக் காணிகள் வழங்கப்படும் என நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறினிமல் பெரேரா தெரிவித்தார்.
ஓமான் நாட்டின் நிறுவனம் ஒன்று , சால்மர்ஸ் கிரானரி (Chalmers’ Granary) நிலத்தையும், விமானப்படைத் தலைமையகத்தையும் குத்தகைக்கு எடுக்கும் என்று கூறப்பட்டபோதிலும், அது இடம்பெறவில்லை.
இந்தநிலையில் கொழும்பு 5 இல் உள்ள சம்மிட் வீட்டுத்தொகுதியும்( Summit Flats )இந்த இரண்டு காணிகளையும் கொள்வனவு செய்ய துபாய் முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தவிர கொழும்பு கொம்பனித்தெரு வொக்ஸ்ஹோல் வீதியில் (Vauxhall Street) உள்ள காணி, டி.ஆர். கொழும்பில் விஜேவர்தன மாவத்தை; நுகேகொட மற்றும் கொள்ளுப்பிட்டி சந்தைகள், நான்கு ஏக்கர் கொண்ட புறக்கோட்டை உலக சந்தை, இராஜகிரிய, டென்சில் கொப்பேகடுவ மற்றும் பத்தரமுல்லையில் தலா மூன்று ஏக்கர் காணி, நுவரெலியா மற்றும் கண்டியில் அமைந்துள்ள காணிகளே குத்தகைக்கு விடப்படவுள்ளன.
இதேவேளை கலப்பு பொருளாதாரத் திட்டங்களுக்கான காணிகள் 33. 50 மற்றும் 99 வருடக்கால குத்தகைக்கு விடப்படவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.