அவசர நிலையை அறிவித்தது கொழும்பு IDH மருத்துவமனை!
நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையும் அவசர நிலையை அறிவித்துள்ளது.
குறித்த வைத்தியசாலையிலும் கோவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதனால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் கண்டி பொது வைத்தியசாலையிலும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதுடன் தெல்தெனிய மருத்துவமனையிலும் இடப்பற்றாக்குறை காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்றையதினம் , இரத்தினபுரி மற்றும் காலி – கராப்பிட்டிய போதனா மருத்துவமனைகளும் அவசர நிலையினை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://jvpnews.com/article/popular-hospital-has-declared-a-state-of-emergency-1628070921