கொழும்பில் பெண்ணொருவர் அதிரடி கைது! சிக்கிய பல மர்ம பொருட்கள்
கொழும்பு - தெமட்டகொட பகுதியில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் உட்பட தங்க ஆபரணங்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பெண் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கடந்த செவ்வாய்க்கிழமை (21-06-2022) கைது செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கைது தொடர்பில் தெரியவருவது,
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக தெமடகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 57 வயதுடைய பெண் ஒருவராவார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 21 கிராம் 470 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 26 கிராம் 910 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு, 6 தங்க மாலைகள், 25 தங்க வளையல்கள், 6 கையடயக்கத்தொலைபேசிகள் மற்றும் 2 மடிக்கணினிகள் என்பனவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.