தென்னிலங்கையில் எரிபொருள் திருட்டு ; சுற்றிவளைப்பில் 5 பேர் கைது
கெரவலபிட்டிய - கொலன்னாவ பெற்றோலிய களஞ்சிய நிலையத்தின் புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று (04) எரிபொருளை திருடி வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, அனல்மின் நிலையத்திலிருந்து மின் உற்பத்திக்காக எடுக்கப்பட்ட எரிபொருளை திருடி வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் மோசடி கும்பலை சுற்றிவளைத்து திருடப்பட்ட 33,000 லீற்றர் எரிபொருள் எண்ணெயுடன் பவுசர் வாகனம் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது பெரிய அனல் மின் நிலையமான கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் 300 மெகாவாட் கொள்ளளவை தேசிய கட்டத்திற்கு அனுப்புகிறது.
வத்தளை, போபிட்டிய பிரதேசத்தில் இந்த அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை திருடும் மோசடி கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, யுகடனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் எரிபொருள் எண்ணெய் வத்தளை, போபிட்டியவில் உள்ள போவர் கார் யார்டில் இருந்து திருடப்பட்டு வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
கிடைத்த தகவலுக்கு அமைய கொலன்னாவ களஞ்சிய நிலையத்தின் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று பிற்பகல் குறித்த இடத்தை சுற்றிவளைத்துள்ளது.