சுகாதார அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி வசூல் மன்னன்கள்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றினால் சுகாதார ஊழியர்கள் மற்றும் மக்களிடம் பணம் வசூலிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
அதேவேளை சுகாதார அமைச்சின் எந்தவொரு அதிகாரியும் தொலைபேசி, வட்ஸ்அப் அல்லது வேறு எந்த ஊடகத்தையும் பயன்படுத்தி இதுபோன்ற பணத்தை சேகரிக்கும் அல்லது கோரும் செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
எனவே இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்கி வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிடவோ அல்லது வேறு வழிகளில் பணம் அனுப்பவோ வேண்டாம் என்றும், அந்த மோசடி செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.