புத்தளத்தில் இசைக்கச்சேரியின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்: பீதியடைந்த மக்கள்!
புத்தளம் - கொழும்பு முகத்திடலில் நேற்றிரவு All Write இசைக் குழுவினரால் இசைக்கச்சேரி இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் திடீரென மேடை சரிந்ததில் இசைக் கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் பதற்றமடைந்தனர்.
இச்சம்பவத்தின் போது, இசைக் கச்சேரியை நிறுத்திவிட்டு இசை வாத்தியங்களை பாதுகாப்பாக அப்புரப்படுத்தப்பத்தினர்.
இதனால் சிறிது நேரம் இசைக் கச்சேரி நிறுத்தப்பட்டது. பின்னர் மேடையில் மேலே போடப்பட்டிருந்த tent அகற்றப்பட்டது.
இதனையடுத்து கிரான் வாகனத்தைக் கொண்டு வந்து கிரான் இயந்திரம் மூலம் மேடைக்கு முட்டுக்கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து அப்புரப்படுத்தப்பட்ட வாத்தியங்களை மீண்டும் பொருத்தி இசைக் கலைஞர்கள் இசைக் கச்சேரியைத் தொடர்ந்தும் நடாத்திச் சென்றனர்.
குறித்த இசைக் கச்சேரியை கண்டுகழிப்பதற்கு சுமார் பல்லாயிரக்கணக்கான ரசிகள் வருகைத் தந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.