இலங்கைக்கு மனிதாபிமான சேவைகளை வழங்கிய கொலின் பவல் காலமானார்
இலங்கைக்கு மனிதாபிமான சேவைகளை வழங்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார்.
கொலின் பவல் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
முன்னாள் இராணுவ உயர் அதிகாரியான கொலின் பவல் (Colin Powell), அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் நிர்வாகத்தில் 2000 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இராஜங்கச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இப்பதவியை வகித்த முதல் ஆபிரிக்க அமெரிக்கர் கொலின் பவல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரலை இலங்கையை தாக்கிய வேளை, பெரும் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் இலங்கைக்கு உதவ என் அமெரிக்க படைகளை கொண்டு வந்து சேர்த்த பெருமைக்குரியவர் கொலின் பவல் (Colin Powell) என்பது நினைவில்கொள்ளத்தக்கது.