தென்னந்தோட்டத் தொழிலாளி அடித்துப்படுகொலை
புத்தளம் - முந்தலம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவதம்குளம்பகுதியில் நேற்று (24) நபரொருவர் அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரும் சந்தேகநபரும் தென்னந்தோட்டமொன்றில் பணியாற்றி வந்துள்ளதுடன், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 52 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்துள்ள அவரும் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், சம்பவம் தொடர்பில் முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.