அழியும் அபாயத்திலுள்ள பல்லிகள் இலங்கையில் கண்டுபிடிப்பு!
உலகில் அழியும் அபாயத்திலுள்ள உயிரினங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொணே செல்கின்றது. இந்த நிலையில் , இலங்கைக்கு சொந்தமான புதிய இரண்டு வகை பல்லிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஆய்வுக்குழு ஒன்று இந்த பல்லிகளை கண்டு பிடித்துள்ளனர்.
இந்த இரண்டு பல்லி இனங்களும் முறையே ஜெயவீரவின் பல்லி (Cnemaspis jayaweerai) மற்றும் நாணயக்காரவின் பல்லி (Cnemaspis nanayakkarai) என பெயரிடப்பட்டுள்ளன.
அழியும் அபாயத்திலுள்ள உயிரினங்கள்
இந்தப் பல்லிகள் குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள கலகிரிய மலையிலும் அம்பறை மாவட்டத்திலுள்ள எதகல மலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை இரண்டு பல்லி இனங்களும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிகப்புப் பட்டியலின் கீழ் அழியும் அபாயத்திலுள்ள உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.