டிக்கெட் எடுத்து பேருந்தில் பயணித்த முதலமைச்சர் விஜய்!
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூருக்குச் செல்லும் பேருந்தில் டிக்கெட் எடுத்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பயணம் மேற்கொண்டமை சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இன்று(25) தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உட்பட 6 கோட்டங்களுக்காக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கிவைத்தார்.

டிக்கெட் எடுத்து தமிழக முதலமைச்சர் பயணம்
அத்துடன் பெரம்பூர் செல்லும் 29ஏ பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துனருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
PTA விரைவில் ரத்து ; குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்; ஜனாதிபதி அனுரகுமார அறிவிப்பு
ஓட்டுநர் அருகே முன்புற இருக்கைக்குச் சென்ற முதல்வர் விஜய், தனது தொலைபேசியில் சாலையில் நிற்கும் மக்களையும் பேருந்து பயணத்தை அவரே காணொளி எடுத்ததுடன், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 29ஏ பேருந்தில் பயணித்த முதலமைச்சர் விஜய், பின்னர்,அதே பேருந்தில் தலைமைச் செயலகம் திரும்பியதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.