அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே! CM விஜய் பேச்சால் நிகழ்வில் சிரிப்பலை!
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று சென்னையில் நடந்த கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நிலையில் அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே என கூறியமை சபையில் இருந்தோரை சிரிப்பலையில் ஆழ்த்தியது.
இந்த விழாவில் அவர் பேசிய போது ‘கல்வித்துறையில் ஊழல் என்பதை எப்படி ஏற்க முடியும்? ஒவ்வொருவருக்கும் அடிப்படை கல்விதான்? படிக்கும் நூலகங்களில் கூட ஊழல் செய்திருக்கிறார்கள்.. அது என்ன அறிவுலமா இல்லை ஊழல் உலகமா? என கேள்வி எழுப்பினார்.

தொறந்துதான் பாருங்களேன்...
மேலும் ‘என்னுடைய டேபிளில் மூன்று ஃபைல்கள் இருப்பதாகத்தான் கூறினேன்.. எதிர்க்கட்சியில் இருந்து உடனே ‘தொறந்துதான் பாருங்களேன்’ என்று கூறினார்கள். யாரு சொல்றதுன்னு தெரியுமா? ‘ஐயோ வந்துட்டாரு கலாய்ப்பாரு’ என ஒருவர் இருக்கிறார் என்று விஜய் டிவி ராமர் ஸ்டைலில் நக்கலடித்தார்.
முதல்வர் விஜய் மறைமுகமாக சொன்னது எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத்தான் என பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தவெகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். எனினும் மக்கள் பணியே தனது இலக்கு என முதலமைச்சர் விஜய் விமர்சங்களுக்கு செவி சாய்க்காது தனது கடமைகளை சிறப்பாக செய்து வருகின்றமை மக்கள் மத்தில் அவருக்கான செல்வாகக்கை உயர்த்தியுள்ளது.