முதலமைச்சர் விஜய் பிரதமர் ஆவாரா... விஜயகாந் பிரேமலதா கமெண்ட்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் , மக்களிடம் உள்ள செல்வாக்கு காரணமாக எதிர்காலத்தில் இந்திய பிரமராக வாய்ப்பு உள்ளதாக பரவலாக பேசப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,

யாருக்கு என்ன எழுதி இருக்கிறதோ அது நடக்கும்
‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு, நம்பிக்கை இருக்கிறது, அடுத்த கட்டம் செல்வதற்கான உரிமை இருக்கிறது, அதுபற்றி எந்த ஒரு கருத்தும் நான் சொல்ல விரும்பவில்லை ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு.. யாருக்கு என்ன தலையில் எழுதி இருக்கிறதோ அது நடக்கும் என்பதே என் கருத்து’ எனக் கூறியிருக்கிறார்.
நடிகராக இருந்த விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.
அவரின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தற்போது தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் விஜய்க்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களிலும் மவுசு அதிகரித்து வருகிறது. அடிப்படையில் அவர் ஒரு நடிகர் என்பதால் ஒரு கவர்ச்சிகரமான ஒரு முதலமைச்சராகவே அவர் பார்க்கப்படுகிறார்.
இதன் காரணமாக 2029 நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் விஜய் முதல் பிரதமர் ஆவார் என பரவலாக பேசப்படுகின்றது.